படகுத்துறை மேடை இடிந்து விழுந்ததில் குறைந்தது எழுவர் உயிரிழப்பு

படகுத்துறை மேடை இடிந்து விழுந்ததில் குறைந்தது எழுவர் உயிரிழப்பு

1 mins read
1fe33f6f-ad33-46c2-a309-efdeb0d51b62
சபேலோ தீவைப் படகில் மட்டுமே சென்றடைய முடியும். அரசாங்கத்துக்குச் சொந்தமான படகில் அதன் கரையை அடைய 20 நிமிடங்கள் எடுக்கும். - படம்: பிக்சாபே

ஜார்ஜியா: அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் கரையோரத்தில் படகுத்துறை மேடை ஒன்றின் ஒரு பகுதி சனிக்கிழமை (அக்டோபர் 19) பிற்பகல் இடிந்து விழுந்ததில் குறைந்தது எழுவர் உயிரிழந்தனர்.

அட்லாண்டிக் கடல்நீரில் குறைந்தது 20 பேர் விழுந்ததைத் தொடர்ந்து, காணாமல்போனவர்களைத் தேடும் பணியில் அமெரிக்கக் கடலோரக் காவல்படைக் கப்பல்கள் சனிக்கிழமை இரவு ஈடுபட்டன.

சிறிய குல்லா-கீச்சி சமூகத்தின் கொண்டாட்டத்திற்காக சபேலோ தீவில் மக்கள் கூடியபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கிய பொருள்களை ஒலி அலைகள் கொண்டு அறியும் வசதி கொண்ட கடலோரக் காவல்படைக் கப்பல்களும் ஹெலிகாப்டர்களும் உடனடியாக தேடுதல், மீட்புப் பணியில் ஈடுபடத் தொடங்கியதாக அதிகாரிகள் கூறினர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

சபேலோ தீவைப் படகில் மட்டுமே சென்றடைய முடியும். அரசாங்கத்துக்குச் சொந்தமான படகில் அதன் கரையை அடைய ஏறக்குறைய 20 நிமிடங்கள் எடுக்கும்.

குறிப்புச் சொற்கள்
விபத்துபடகுஉயிரிழப்பு