அக்டோபர் இறுதியில் ஆலையை மூடும் ‘மேரி பிஸ்கட்’ தயாரிப்பாளரான ‘லீ பிஸ்கட்ஸ்’

அக்டோபர் இறுதியில் ஆலையை மூடும் ‘மேரி பிஸ்கட்’ தயாரிப்பாளரான ‘லீ பிஸ்கட்ஸ்’

படங்கள்: கூகல் மேப்ஸ் (வலது), லசாடா( இடது)

23 Oct 2026 - 5:19 pm

1 mins read

ஜோகூர் பாரு: மலேசியாவில் பிரபலமான ‘மேரி பிஸ்கட்’ தயாரிப்பு நிறுவனமான லீ பிஸ்கட்ஸ், ஜோகூர் பாருவின் பொந்தியான் பகுதியில் செயல்பட்டுவரும் தனது தொழிற்சாலையை அக்டோபர் இறுதியில் மூடவுள்ளது.

92 ஆண்டுகள் பழமையான அந்நிறுவனம் ‘நாம் லீ’ என அழைக்கப்படுகிறது.

சிற்றுண்டி தயாரிப்புத் துறையிலிருந்து விலகி ரப்பர், பனைத் தோட்டங்கள் உள்ளிட்ட தனது முதன்மை வணிகங்களில் கவனம் செலுத்தவும் சொத்துகளை ஒருங்கிணைக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் வியாழக்கிழமை (அக்டோபர் 22) செய்தி வெளியிட்டுள்ளன.

தொழிலதிபர் லீ கோங் சியான் என்பவரால் 1934ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம், 1955ஆம் ஆண்டில் ஜோகூர் பாருவின் தம்போய் பகுதிக்கு மாற்றப்பட்டது.

பின்னர், 2005ஆம் ஆண்டில் பொந்தியானுக்குத் தனது உற்பத்தி ஆலையை மாற்றியது.

சிங்கப்பூரில் என்டியுசி ஃபேர்பிரைஸ் இணையத்தளச் கடையில் குறைந்தது 23 லீ பிஸ்கட்ஸ் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

தொழிற்சாலை மூடல் குறித்து விநியோகிப்பாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடந்த மாதம் அறிவிப்பு அனுப்பப்பட்டதாகவும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் அறியப்படுகிறது.

அதனை பெக்கான் நானாஸ் சட்டமன்ற உறுப்பினர் டான் எங் மெங்கும் உறுதிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்