தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெட்டன்யாகுவை நெருக்கும் சட்ட மிரட்டல்கள்

1 mins read
e4482fb1-9b62-446d-96f9-f08f58b74dba
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைதாணையுடன் உள்நாட்டில் ஊழல் வழக்கு ஒன்றிலும் இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சம்பந்தப்பட்டிருக்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: உள்நாட்டிலும் உலகளவிலும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சட்டரீதியான சிக்கல்களை எதிர்நோக்கும் நிலையில் அவரது அரசியல் வாழ்க்கை நிச்சயமற்றதாக உள்ளது என்றும் காஸா, லெபனான் போர்களின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் பகுப்பாய்வாளர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர்.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் நவம்பர் 21ஆம் தேதி திரு நெட்டன்யாகு, அவரின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் யோயேவ் காலண்ட் இருவருக்கும் கைதாணை பிறப்பித்தது இஸ்‌ரேலை உலுக்கியது. 13 மாதங்களாகத் தொடரும் காஸா போரில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும் போர்க்குற்றங்களுக்காகவும் இந்தக் கைதாணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இன்னும் சில நாள்களில் ஊழல் வழக்கு விசாரணை ஒன்றில் திரு நெட்டன்யாகு சாட்சியம் அளிக்கவுள்ள நிலையில் இந்தக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக திரு நெட்டன்யாகுவைத் துரத்திவரும் இந்த ஊழல் குற்றச்சாட்டு, அவர் குற்றவாளி என்று நிரூபணமானால் அவரது அரசியல் வாழ்க்கையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரக்கூடும். இருப்பினும், தாம் குற்றமற்றவன் என்று நெட்டன்யாகு கூறி வருகிறார்.

இதற்கிடையே, உலகமே தங்களுக்கு எதிராக இருப்பதாக எண்ணி எரிச்சலடையும் இஸ்‌ரேலியர்கள், வெகுவாக விமர்சிக்கப்படும் தங்களின் தலைவருக்காகக் குரல்கொடுக்க முனையலாம் என்றார் அனைத்துலக உறவுகள் நிபுணர் டாக்டர் யோனட்டன் ஃபிரீமன்.

நீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்த அரசாங்கம் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கும்போது, அதற்கு நேர்மாறானது நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்