நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் வளர்ச்சிக்குப் பொதுவான வரம்புகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜக்கு பச்சோக்கி தெரிவித்துள்ளார்.
தொழில்துறை முழுவதும் செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றத்தை அளவிட ‘பெர்ப்ளெக்சிட்டி’ (perplexity) அளவுகோலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்
திரு பச்சோக்கியின் ஆலோசனைக்கு ஓப்பன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனும் ஆதரவளித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சியால் இப்போது சில பாதுகாப்புக் கவலைகள் அதிகரித்துள்ளன. அதைத் தொடர்ந்து பச்சோக்கியின் கருத்து வெளியாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கான இலக்கை எட்டும் வரை, நிறுவனங்கள் அந்த வரம்புகளைத் தாண்டக்கூடாது என்றார் திரு பச்சோக்கி.
ஆலோசனைப்படி, செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி முறைகளில் 2027ஆம் ஆண்டுக்குள் பெரும் முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும். புதிய பாதுகாப்பு வழிமுறைகள் நடைமுறைக்கு வரும் வரை, ஒப்புக்கொள்ளப்பட்ட திறன் வரம்புகளை மீறக்கூடாது என நிறுவனங்கள் உறுதியளிக்க வேண்டும்.
