திருடப்பட்ட நிதியில் பெரும்பகுதி மீட்பு: பைனான்ஸ்

திருடப்பட்ட நிதியில் பெரும்பகுதி மீட்பு: பைனான்ஸ்

படம்: புளூம்பெர்க்

01 Nov 2026 - 6:51 pm

1 mins read

நியூயார்க்: மின்னிலக்க நாணயங்களுக்குப் பரிமாற்றச் சேவை வழங்கும் முன்னணி நிறுவனமாக பைனான்ஸ் உள்ளது.

சில நாள்களுக்கு முன்னர் அந்த நிறுவனத்தின் தளத்திலிருந்து கிட்டத்தட்ட 6.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மின்னிலக்க நாணயங்கள் திருடப்பட்டன.

இந்நிலையில் திருடப்பட்ட நிதியிலிருந்து 95 விழுக்காட்டை பைனான்ஸ் மீட்டுள்ளது.

இதையடுத்து, பைனான்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களது நிதியைக் கட்டம் கட்டமாக எடுக்கத் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை முதல் கட்டம் தொடங்கும். அதில் பிட்காயின், ஈதர் உள்ளிட்ட முக்கிய நாணயங்களும் அடங்கும்.

மீட்கப்படாத எஞ்சிய 5 விழுக்காடு நிதிகளை மூலதனமாக்கக் கூடுதல் நேரம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, பைனான்ஸ் இணையத் திருட்டுக்கு வடகொரிய ஆதரவு பெற்ற ‘டிரேடர்டிரெய்டர்’ என்ற குழுவே காரணம் என ‘எஃப்பிஐ’ கூறியுள்ளது.

திருடப்பட்ட சொத்துகளை அக்குழு ஈத்தேரியமாக (மின்னிலக்க நாணயம்) மாற்றுவதைக் காவல்துறையினர் கண்காணித்துள்ளனர்.

திருட்டால் ஏற்பட்ட நிதி இழப்பை பைனான்ஸ் நிறுவனம் முழுமையாக ஏற்கும் என்றும் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்