ஈரான் அதிகாரிகளுடன் மக்கா ஒப்பந்த நாடுகள் சந்திப்பு

ஈரான் அதிகாரிகளுடன் மக்கா ஒப்பந்த நாடுகள் சந்திப்பு

1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

26 Oct 2026 - 6:22 pm

2 mins read

டெஹ்ரான்: வட்டார ஒருங்கிணைப்பு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகச் சவூதி அரேபியா, துருக்கியே, பாகிஸ்தான் ஆகிய மக்கா ஒப்பந்த நாடுகளின் உயரதிகாரிகள் திங்கட்கிழமை (அக்டோபர் 26) ஈரானிய அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர். டெஹ்ரானில் அந்தச் சந்திப்பு நடைபெறும் என்று தகவலறிந்த இருவர் தெரிவித்தனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத அவ்விருவரும், சவூதி அரேபியா சார்பில் அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானும் பாகிஸ்தான் சார்பில் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரும் கலந்துகொள்வர் என்று கூறினர்.

துருக்கியே நாட்டின் உளவுத்துறைத் தலைவரும் இச்சந்திப்பில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. இது குறித்து, சவூதி அரசாங்க ஊடக அலுவலகமும் பாகிஸ்தானின் ராணுவ ஊடகப் பிரிவும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதிப் போராளிகள் சவூதிமீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்தப் போராளிக் குழுவுடனான சண்டை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட்ட ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் சவூதி இடைமறித்தது. இந்நிலையில், இச்சந்திப்பு இருதரப்பிற்கும் இடையிலான முதலாவது உயர்நிலைத் தொடர்பாக அமையும்.

முன்னதாக, மக்கா ஒப்பந்த நாடுகளின் அமைச்சர்கள் ரியாத் நகரில் அவசரக் கூட்டம் நடத்தி, சவூதியில் ராணுவப் படைகளையும் திறன்களையும் விரைவாக நிலைநிறுத்துவது குறித்து இணக்கம் கண்டனர்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலில் இந்த மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் நட்பு நாடான சவூதி அரேபியாவிற்குப் போரில் பெரியதோர் அழுத்தத்தையும் உண்டாக்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கையெழுத்தான மக்கா ஒப்பந்தத்தின்படி, ஓர் உறுப்பு நாட்டின் மீதான ஆயுதத் தாக்குதல் அனைத்து நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும். நாட்டின் எல்லைப் பரப்பு, இறையாண்மை, அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க அனைத்து வழிகளையும் பயன்படுத்த அந்த உடன்பாட்டின் முதல் விதி வழிவகுக்கிறது. பாகிஸ்தான் கடந்த வாரம் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், துருக்கியே நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்