மலாக்கா தேர்தல்: நாளை வேட்புமனுத் தாக்கல் தினம்

மலாக்கா தேர்தல்: நாளை வேட்புமனுத் தாக்கல் தினம்

படம்: பெர்னாமா

30 Oct 2026 - 6:40 pm

2 mins read

மலாக்கா: 16வது மலாக்கா மாநிலத் தேர்தல் நாளை வேட்புமனுத் தாக்கலுடன் தொடங்குகிறது.

அதில் 28 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், 14 நாள்கள் கொண்ட தீவிரத் தேர்தல் பிரசாரத்திற்கான களமும் ஆரம்பமாகிறது.

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 28 வேட்புமனுத் தாக்கல் நிலையங்கள்மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. அங்குப் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் காலை 9 மணி முதல் காலை 10 மணி வரை தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின் தேர்தல் அதிகாரிகள் தகுதிபெற்ற வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள்.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளாக நவம்பர் 14ஆம் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேவேளையில், முன்கூட்டியே வாக்களிப்பதற்கான நாளாக நவம்பர் 10ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இத்தேர்தலில் மொத்தம் 687,697 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். அவர்களில் 675,166 சாதாரண வாக்காளர்களும் 9,769 ராணுவ அதிகாரிகளும் அவர்களின் வாழ்க்கைத் துணைகளும் 2,762 காவல்துறையினரும் அடங்குவர்.

வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 24 மணி நேரத்திற்குக் குறைவான நேரமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

அந்தப் பட்டியலில் நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள், புதுமுகங்கள், மீண்டும் களமிறங்கும் முன்னாள் தலைவர்கள் எனப் பலரும் இடம்பெற்றுள்ளனர்.

அத்தேர்தலில் 24 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடப்போவதாகப் பக்கத்தான் ஹரப்பான் அறிவித்துள்ளது. பிகேஆர் கட்சி 10 வேட்பாளர்களையும், டிஏபி மற்றும் பார்ட்டி அமானா நெகாரா தலா ஏழு வேட்பாளர்களையும் களமிறக்குகின்றன.

பாரிசான் நேஷனல் கூட்டணி 22 இடங்களில் போட்டியிடுகிறது. அம்னோ 18 வேட்பாளர்களையும் மசீச மூன்று வேட்பாளர்களையும், மஇகா ஒரு வேட்பாளரையும் களமிறக்குகின்றன.

குறிப்புச் சொற்கள்