ஏஐ சில்லு கடத்தலைத் தடுக்கச் சிங்கப்பூர், அமெரிக்காவுடன் மலேசியா ஒத்துழைப்பு

ஏஐ சில்லு கடத்தலைத் தடுக்கச் சிங்கப்பூர், அமெரிக்காவுடன் மலேசியா ஒத்துழைப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

13 Nov 2026 - 8:57 pm

1 mins read

கோலாலம்பூர்: அதிகச் செயல்திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவுச் சில்லுகள் தொடர்பில் அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை எதிர்கொள்ளும் வகையில், சில்லு கடத்தலைத் தடுக்கச் சிங்கப்பூர், அமெரிக்காவுடன் இணைந்து மலேசியா செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது.

மலேசியாவிற்குச் செல்லும் சில்லுகள் மீண்டும் ஏற்றுமதியாயினவா எனக் கண்டறிய, உள்ளூர்ச் சுங்கத்துறையுடன் சோதனைகளை நடத்துவதாக மலேசியாவின் முதலீடு, வர்த்தக, தொழில்துறை அமைச்சு வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) தெரிவித்தது.

சீனாவிற்குச் சில்லுகளை அனுப்பியதாகக் கூறப்படும் நிறுவனத்தை விசாரிக்க முறையான கோரிக்கையோ ஆதாரமோ இல்லை என அமைச்சர் ஜோகாரி கனி நவம்பர் 10ல் கூறினார்.

இறக்குமதி செய்யப்பட்ட என்விடியா சில்லுகள் மலேசியாவுக்கு வெளியே சென்றதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் கூறியுள்ளார்

சிங்கப்பூர், அமெரிக்காவிடம் இருந்து முறையான கோரிக்கை வராவிடிலும் நிச்சயமாக ஒத்துழைப்போம் என்றார் அவர்.

சில்லுகளை இறக்குமதி செய்ய மலேசியாவிற்கு உரிமம் தேவையில்லை. எனினும், கடத்தல் குற்றச்சாட்டுகளால் 2025 ஜூலை முதல் அமெரிக்கச் சில்லுகள் மலேசியாவை விட்டு வெளியேற அரசாங்கம் அனுமதியைக் கட்டாயமாக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்