தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உபரி மின்சாரத்தை மட்டுமே சிங்கப்பூருக்கு விற்கிறோம்: மலேசியா

1 mins read
519c685e-4f68-4897-a52d-37bc0244855f
உபரியாக உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்திக்கொள்ள முன்வருமாறு மலேசிய நிறுவனங்களுக்குத் துணை அமைச்சர் துவான் இப்ராகிம் துவான் மன் ஊக்குவித்துள்ளார். - கோப்புப்படம்

கோலாலம்பூர்: இம்மாதத்திலிருந்து புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை சிங்கப்பூருக்கு விநியோகிக்க இருப்பதாக சில நாள்களுக்குமுன் மலேசியா அறிவித்திருந்தது.

இந்நிலையில், மலேசியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உபரியாகவுள்ள புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை மட்டுமே சிங்கப்பூருக்கு வழங்கவிருப்பதாக ஆற்றல் மாற்றம், நீர் உருமாற்றத் துறை துணை அமைச்சர் அக்மல் நசீர் விளக்கம் அளித்துள்ளார்.

அதனால், அந்த உபரி மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அதிகமான நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்கு மாறும்படி அவர் ஊக்குவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று (டிசம்பர் 11) பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி உறுப்பினர் துவான் இப்ராகிம் துவான் மன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது திரு நசீர் இதனைத் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்குப் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை விற்கவிருப்பது குறித்தும் உள்ளூர்த் தரவு மையங்களுக்கான மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது குறித்தும் திரு இப்ராகிம் கேள்வி எழுப்பினார். அத்துடன், இதனால் வரும் 2050ஆம் ஆண்டிற்குள் நிகர அளவில் கரிம வெளியீடற்ற நாடாக மாறுவது என்ற மலேசியாவின் இலக்கை எட்ட முடியாமல் போகுமா என்றும் அவர் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த திரு நசீர், மலேசியாவின் மின்விநியோகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் அளவு இப்போது 28 விழுக்காடாக உள்ள நிலையில், அதனை வரும் 2025ஆம் ஆண்டிற்கும் 31 விழுக்காடாகவும், 2035ஆம் ஆண்டிற்குள் 40 விழுக்காடாகவும், 2050ஆம் ஆண்டிற்குள் 70 விழுக்காடாகவும் உயர்த்த கடப்பாடு கொண்டுள்ளதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்