தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா-தாய்லாந்து சுற்றுப்பயண ரயில் சேவை சோதனை நிறைவு

1 mins read
88e39653-51ac-4d89-8e3f-d69dc038735c
மலேசியா-தாய்லாந்து ‘மைசவாஸ்தீ’ ரயில் சேவை. - படம்: தாய்லாந்து தேசிய ரயில்வே துறை

பேங்காக்: மலேசிய, தாய்லாந்து தேசிய ரயில்வே நிறுவனங்கள் இரு நாடுகளையும் இணைக்கும் ரயில் சேவைக்கான சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளன.

‘மைசவாஸ்தீ’ என்றழைக்கப்படும் இந்த ரயில் சேவை சோதனையை மலேசியாவின் கேடிஎம்பி, தாய்லாந்தின் எஸ்ஆர்டி ஆகிய இரண்டும் சோதித்து முடித்துள்ளதாக மலாய் மெயில் ஊடகம் தெரிவித்துள்ளது. ‘மைசவாஸ்தீ’ ரயில் சேவையை இவ்வாண்டிறுதியில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 21லிருந்து 23ஆம் தேதி வரை பாடாங் பசார்-சுராட் தானி பாதையில் ரயில் சேவை சோதனையிடப்பட்டது. இது, ரயில் சுற்றப்பயணத்தை ஊக்குவிப்பதிலும் இரு நாட்டுப் பொருளியல், கலாசார, நட்புறவு சம்பந்தப்பட்ட தொடர்புகளை வலுப்படுத்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்குகிறது என்று எஸ்ஆர்டியின் முடிவெடுக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரியான வீரிஸ் அம்மரப்பாலா கூறினார்.

இந்த ரயில் சேவையின் அதிகாரத்துவ தொடக்கத்தை முன்னிட்டு இடம்பெறும் ஏற்பாட்டுப் பணிகளின் அங்கமாக கேடிஎம்பி, பேங்காக்-பாடாங் பசார் பாதையில் மூன்று பெட்டிகளைக் கொண்ட ரயிலைச் சோதனையிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

‘மைசவாஸ்தீ’ ரயில் சேவை தற்போது விடுமுறை நாள்களில் கோலாலம்பூர்-ஹத்யாய் பாதையில் இயங்குகிறது. ரயில் சுற்றுப்பயணத்தை ஊக்குவிப்பதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவது இச்சேவையின் இலக்காகும்.

குறிப்புச் சொற்கள்