டிக்டாக் நேரடி விற்பனையில் மலேசியர் சாதனை: 12 மணி நேரத்தில் S$750,000

டிக்டாக் நேரடி விற்பனையில் மலேசியர் சாதனை: 12 மணி நேரத்தில் S$750,000

2 mins read
ebcb4ccf-664d-40cd-9bc1-b3fa74821c4e
கைரூல் டிக்டாக் விற்பனையில் 50,000க்கும் மேற்பட்ட பொருள்கள் விற்கப்பட்டன. - படம்: கைரூல் அமிங்/எக்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவைச் சேர்ந்த கைரூல் அமிங், டிக்டாக் தளத்தில் உணவு, சமையல் தொடர்பான உள்ளடக்கங்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர்.

அவர், அண்மையில் புதிய சாதனையைப் படைத்து பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

தொழில்முனைவருமான கைரூல் அமிங், பிப்ரவரி 19ஆம் தேதியன்று 12 மணி நேரம் நீடித்த நேரடி ஒளிபரப்பில் 2.3 மில்லியன் ரிங்கிட் (S$750.000) வருவாயை ஈட்டியிருக்கிறார்.

“கடவுளுக்கே புகழ் சேர வேண்டும். நாங்கள் ஒரு சாதனையை முறியடித்துள்ளோம். ‘டிக்டாக்‌ஷாப் மலேசியா’ வரலாற்றில் இல்லாத 2.3 மில்லியன் ரிங்கிட் விற்பனையைச் சாதித்துள்ளோம். எல்லோருக்கும் நன்றி,” என்று கைரூல், 33, பிப்ரவரி 20ஆம் தேதி எக்ஸ் ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

திரு கைரூல் தான் விற்பனை செய்த பொருள்களைப் படத்துடன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டார்.

அந்த நேரடி விற்பனையில் 51,710க்கும் மேற்பட்ட பொருள்கள் விற்கப்பட்டன. ஏறக்குறைய 5.42 மில்லியன் பேரை அது ஈர்த்துள்ளது.

அவர் தயாரித்து பிரபலமடைந்த சம்பால் நியெட் பெராபி (மிளகாய்ச் சாந்து) மற்றும் டென்டெங் நியெட் பெராபி, ரெண்டாங் நியெட் பெராபி ஆகியவை அவர் விற்ற பொருள்களில் அடங்கும்.

அண்மையில் திறக்கப்பட்ட அவரது ரெம்பாயூங் உணவகத்திலிருந்து டிக்டாக் தளம் வழியாக நேரடி விற்பனை நடத்தப்பட்டது. இது, மலேசியாவில் ஆக நீண்டநேர டிக்டாக் நேரடி விற்பனையாகும். அந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் ஸிஸான் ரசாக் உட்பட பத்து பேர் கலந்துகொண்டனர்.

கடந்த 2025ல் டிக்டாக்‌ஷாப் நேரடி விற்பனையில் அதிவிரைவாக ஒரு மில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்டி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். இதற்கு முன்பு 2024ல் மூன்று நிமிடம் 28 வினாடிகளில் அந்தச் சாதனையை அவர் புரிந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்