தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலையுச்சியில் படமெடுத்துக்கொண்ட மலேசிய மணமக்கள்

1 mins read
2c397a4a-2624-464a-bb2d-9ccb462c3e8c
திருவாட்டி லிலியனின் கரம் பிடிக்குமுன் கினபாலு சிகரத்தில் படமெடுத்துக்கொண்ட திரு சீ செங். - படம்: சிஎஸ்_சீசெங்/இன்ஸ்டகிராம்

கோத்தா கினபாலு: திருமணம் நிச்சயிக்கப்பட்டோர் திருமணத்துக்கு முந்தைய படப்பிடிப்பைப் புத்தாக்கமான முறையில் பல்வேறு இடங்களில் நடத்துவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட அத்தகைய புதுமையான முயற்சி, சாபா மாநிலச் சுற்றுப்பயணக் கழகத்தினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 4,095 மீட்டர் உயரத்தில் உள்ள கினபாலு மலையுச்சியில், தான் கரம்பிடிக்கவிருக்கும் திருவாட்டி லில்லியனுடன் படமெடுத்துக்கொண்டுள்ளார் திரு சீ செங்.

அதை இன்ஸ்டகிராமிலும் பதிவிட்டார்.

தென் சிகரத்தின் பின்னணியில் அவர்கள் எடுத்துக்கொண்ட படத்தை ‘இவ்வாரத்தின் பிடித்தமான படம்’ என்று சாபா சுற்றுப்பயணக் கழகம் தேர்ந்தெடுத்துள்ளது.

இன்ஸ்டகிராமில் ஆக அதிக விருப்பக்குறிகளைப் பெற்ற படம் இவ்வாறு அறிவிக்கப்படும்.

சாபா சமூகம்-சார்ந்த சுற்றுப்பயணப் பொருள்களுக்கான 100 ரிங்கிட் (S$30) பற்றுச்சீட்டுடன் ‘ஆக அதிகம் விரும்பப்பட்ட படம்’ என்ற பட்டமும் அதற்குக் கிடைக்கும்.

நவம்பர் 10ஆம் தேதி மாலை 4 மணி நிலவரப்படி சீ செங்கின் இன்ஸ்டகிராம் பதிவுக்குக் கிட்டத்தட்ட 1,200 விருப்பக்குறிகள் கிடைத்திருந்தன. 49 முறை அது பகிரப்பட்டிருந்தது.

மணமக்கள் சீ செங்கும் லிலியனும் சாகச நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர்கள் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்