தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளிக்காகத் தீர்ப்பு நாளை மாற்றிய மலேசிய நீதிமன்றம்

1 mins read
4671e3f7-307e-41eb-8a4d-fc5f5d9e7eb2
கோகுலனுக்கு நவம்பர் 13ஆம் தேதி தீர்ப்பு விதிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது. - படம்: பிக்சாபே

கோலாலம்பூர்: மலேசியாவில் அடிதடி சண்டை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 16) தீர்ப்பு விதிக்கப்படவிருந்தது.

இருப்பினும் இன்னும் சில நாள்களில் தீபாவளி கொண்டாடப்படவுள்ளது.

இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தனது குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாட விரும்புவதாகவும் அதனால் தீர்ப்பை ஒத்திவைக்குமாறும் மலேசிய நீதிமன்றத்தில் அனுமதி கோரினார்.

நிலைமையைப் புரிந்துகொண்ட நீதிபதி, தீர்ப்பை நவம்பர் 13ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

41 வயதான கோகுலன் முடி திருத்தும் வேலையில் உள்ளார். அவர் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் ஆடவரை வெட்டுக் கத்தியால் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து கோகுலன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், கோகுலன் மீதான வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை (அக்டோபர் 16) வெளியிடவிருந்தது. தீர்ப்பு எப்படி வரும் என்று அறியாத கோகுலனின் தரப்பு, தீர்ப்பை ஒத்திவைக்குமாறு நீதிபதியைக் கேட்டுக்கொண்டது. இதையடுத்து நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கோகுலனுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்