மலேசிய அரசாங்க ஊழியர்கள் ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்து வேலை செய்வர்

மலேசிய அரசாங்க ஊழியர்கள் ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்து வேலை செய்வர்

1 mins read
f413b88a-2bbf-4716-a190-3fac86d399c2
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தை ஈடுசெய்வதற்கான ஏற்பாடுகளில் ஒன்றாக வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். - படம்: த ஸ்டார்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பொதுத் துறை அலுவலகங்கள் மற்றும் அரசாங்கத் தொடர்புள்ள நிறுவனங்களின் பணியாளர்கள் ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்து வேலை செய்வர் என்று மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தை ஈடுசெய்யும் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.

மத்திய கிழக்கில் மோதல் அதிகரித்து வரும் நிலையில், மலேசியாவின் எரிசக்திப் பாதுகாப்பைக் கட்டிக்காக்கவும் திடீர் விலை ஏற்றத்திலிருந்து பொதுமக்களைக் காக்கவும் விரிவான உத்தி வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய திரு அன்வார், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடு அதன் ஒருபகுதியே என்றார்.

மோதலின் தாக்கம் மலேசியக் குடும்பங்களையும் வர்த்தகங்களையும் பாதிக்கும் வரை காத்திராமல் அரசாங்கம் முன்கூட்டியே செயல்படுவதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்