பெட்ரோனாஸ் தீ: பாதிக்கப்பட்ட மக்களுக்கு மடிக்கணினி, திறன்பேசி

1 mins read
fae180f9-e285-4c34-ae73-ffebc5a74e28
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாசின் அலுவலகம் மூலம் பாதிக்கப்பட்டோர் மின்னணு கருவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். - படம்: freemalaysiatoday.com

பெட்டாலிங் ஜெயா: சுபாங் ஜெயா அருகில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதியில் ஏப்ரல் 1ஆம் தேதி பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்தது.

அத்தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு 100 மடிக்கணினிகள், 100 திறன்பேசிகள், 100 கைக்கணினிகள், 500 மின்னூட்டிகள் ஆகியவற்றை வழங்க அந்நாட்டு மின்னிலக்க அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ கூறினார்.

எரிவாயுக் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோரின் மின்னணுக் கருவிகள் தொலைந்து போனதாகவும் சேதமடைந்துள்ளதாகவும் திரு கோபிந்த் சிங்கிற்குத் தகவல் கிடைத்ததை அடுத்து அமைச்சு அம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாசின் அலுவலகம் மூலம் பாதிக்கப்பட்டோர் மின்னணுக் கருவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

நிலைமை குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ஆக கடைசித் தகவலைச் சரியான நேரத்தில் வழங்க ஓர் இணையத்தளத்தை அமைப்பதற்காக, சிலாங்கூர் அமைச்சர் அலுவலகத்துடனும் சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம், மின்னிலக்கப் பொருளியல் கழகத்துடனும் இணைந்து மின்னிலக்க அமைச்சு செயல்படும் என்றும் திரு கோபிந்த் கூறினார்.

குறிப்புச் சொற்கள்