கோலாலம்பூர்: மலேசியாவின் இஸ்தானா நெகாரா மன்னர் மாளிகை ஊழியர்களுடன் அந்நாட்டு மாமன்னர் சுல்தான் இப்ராகிம் துரிதநடை மேற்கொண்டிருக்கிறார்.
ஆரோக்கியமான, துடிப்பான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்க அவர் பெருந்தன்மையுடன் அந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக மலாய் மெயில் ஊடகம் தெரிவித்துள்ளது. அதோடு, தமக்கும் இஸ்தானா ஊழியர்களுக்கும் இடையிலான பந்தத்தை வலுப்படுத்தவும் அவர் துரிதநடையில் ஈடுபட்டதாக மாமன்னரின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
இஸ்தானா நெகாரா மாளிகை வளாகத்தைச் சுற்றி அவர் 2.5 கிலோமீட்டர் நடந்ததாக அந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. துரிதநடைக்கு இஸ்தானா நெகாரா நலன், விளையாட்டு மன்றம் (KEKSIN) ஏற்பாடு செய்ததாகவும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 200 அதிகாரிகளும் இஸ்தானா நெகாரா ஊழியர்களும் துரிதநடையில் பங்கேற்றனர்.

