மத்திய கிழக்குப் பூசலின் தாக்கத்தை மலேசியர்கள் உணரவேண்டும்: அன்வார்

மத்திய கிழக்குப் பூசலின் தாக்கத்தை மலேசியர்கள் உணரவேண்டும்: அன்வார்

1 mins read
2d58b77e-546b-47b1-9448-54e6dc2e4c4d
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

கோத்தா திங்கி: மத்திய கிழக்குப் பூசல் தொலைதூரத்தில் இடம்பெறும் நிகழ்வாக இருந்தாலும் அது தங்களுக்கும் உலகப் பொருளியலுக்கும் ஏற்படுத்தும் தாக்கத்தை மலேசியர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு மெத்தனமாக இருக்கக்கூடாது என்று அவர் மலேசியர்களுக்கு நினைவூட்டினார்.

“எதுவும் நடக்கவில்லையே என்று நமது மக்கள் எண்ணிவிடக்கூடாது. இது சிலர் கேட்க விரும்பாத செய்தியாக இருக்கலாம். ஆனால், இந்த நாட்டில் வசிப்பவர்கள், நமது குடும்பங்கள், சமூகம் போன்றோர் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்திருக்கவேண்டும்,” என்று நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உரையில் திரு அன்வார் கூறினார்.

“காஸாவில் மக்கள் தினமும் கொல்லப்படுகின்றனர். அங்குப் பலர் பட்டினியால் தவிக்கின்றனர். நமது மக்களே சிரமங்களை எதிர்நோக்கும்போது காஸா மக்களுக்கு எதற்காக உதவவேண்டும் என்று கேள்வி எழுப்புவோரின் மனப்போக்கைப் பின்பற்றாதீர்.

“நீங்கள் உதவ விரும்பாவிட்டால் பரவாயில்லை. அதேவேளை, பிறர் உதவும்போது அதைத் தடுக்காதீர்,” என்றார் திரு அன்வார். காஸாவுக்கென மலேசியா, 30 பெரிய கலன்களை எகிப்துக்கு அனுப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெட்ரோல் விலை உட்பட வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் கவலைப்படுவதைத் தாம் புரிந்‌துகொண்டாலும் மற்ற சில நாடுகளைவிட மலேசியா நல்ல நிலையில் இருக்கிறது என்றும் திரு அன்வார் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்