தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவின் சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலைய ஓடுபாதை மீண்டும் நாளை திறப்பு

1 mins read
b60b02b4-b56b-46fd-9b10-7b547b3cfa9d
வெள்ளம் காரணமாக, நவம்பர் 29 முதல் மூடப்பட்டுள்ள சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையம் திங்கட்கிழமை (டிசம்பர் 9) மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: பெர்னாமா

அலோர் ஸ்டார்: மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையத்தின் ஓடுபாதை நாளை மீண்டும் திறக்கப்படும்.

மோசமான வெள்ளம் காரணமாக, அது நவம்பர் 29 முதல் மூடப்பட்டது.

‘மலேசிய ஏர்போட்ஸ் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட்’ நிறுவனம், ஃபேஸ்புக்கில் அதனை அறிவித்தது.

மீண்டும் செயல்பாடுகளைச் செயல்படுத்துவதில் தங்கள் ஊழியர்களின் அயரா உழைப்பை அது பாராட்டியது.

“ஓடுபாதை மீண்டும் திறக்கப்படும் என்பதை அறிவிப்பதில் நமக்கு மகிழ்ச்சி. ஓடுபாதையின் தயார்நிலையை உறுதிசெய்வதில் ஊழியர்கள் மேற்கொண்ட அயரா முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டது.

ஆக அண்மைய விமானச் சேவை நேரங்களுக்கு விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளும்படி அது பயணிகளுக்கு ஆலோசனை வழங்கியது.

இந்நிலையில், 50 செண்டிமீட்டர் தண்ணீருக்கு அடியில் மூழ்கிய அந்த 2.7 கிலோமீட்டர் நீளமான ஓடுபாதைக்குப் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்