கோத்தா பாரு: அண்மையில் மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பலர் துயர்துடைப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், டிசம்பர் 2ஆம் தேதியன்று முகாமின் கழிவறையில் 15 வயது சிறுமியுடன் 23 வயது ஆடவர் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆடவர் ஒரு கட்டுமானத்துறை ஊழியர் என்று கிளந்தான் காவல்துறை தெரிவித்தது.
அந்த ஆடவருக்கும் சிறுமிக்கும் துயர்துடைப்பு முகாமில் அறிமுகம் ஏற்பட்டதாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் முகம்மது யூசோஃப் மமாட் கூறினார்.
அவர்கள் முறையற்ற செயலில் ஈடுபட்டதை அச்சிறுமியின் சகோதரர் கண்டுபிடித்ததாகவும் அதை அடுத்து சிறுமியின் குடும்பம் காவல்துறையிடம் புகார் அளித்ததாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அந்த ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழக்கு ஜனவரி மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆடவர் பிணையில் விடுவிக்கப்படவில்லை.
கிளந்தானில் வெள்ளம் கரைபுரண்டோடியபோது அம்மாநிலத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்தல், வாகனத் திருட்டு, மானங்கம் ஆகியவை தொடர்பாகப் புகார்கள் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

