தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவில் இந்திய மாணவர்க்குத் தலையில் கத்திக்குத்து; உயிருக்குப் போராட்டம்

1 mins read
98ef9022-86d0-48f1-8ebd-2e18a2ca53d3
மாதிரிப்படம்: - பிக்சாபே

இண்டியானா: அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்திலுள்ள ஓர் உடற்பயிற்சிக்கூடத்தில் இந்திய மாணவர் ஒருவரை 24 வயது ஆடவர் ஒருவர் கத்தியால் குத்தினார்.

வருண் என்ற அந்த இந்திய மாணவர் உயிருக்குப் போராடி வருவதாக ‘தி டைம்ஸ் ஆஃப் நார்த்வெஸ்ட் இண்டியானா’ என்ற பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் ஜோர்டன் ஆண்ட்ரேட் என்ற ஆடவரைக் காவல்துறை கைதுசெய்தது.

வருண் அச்சுறுத்தலாக இருப்பதாக ‘ஒருவர்’ தம்மிடம் கூறியதை அடுத்து, அவர் தம்மைக் கொன்றுவிடலாம் என்று அஞ்சியதாகக் காவல்துறையிடம் ஆண்ட்ரேட் கூறினார்.

வருணின் நெற்றிப்பொட்டில் கத்தியால் குத்தியால் அது மூளைவரை பாய்ந்துவிட்டது என்றும் அவர் உயிர்பிழைக்க ஐந்து விழுக்காடே சாத்தியமுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

அந்த உடற்பயிற்சிக்கூடத்திலுள்ள உடல்தளர்த்து (மசாஜ்) இருக்கையில், தலையில் காயம்பட்ட நிலையில் வருணைக் கண்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

வருண் அமைதியானவர் என்றும் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பார் என்றும் அந்த உடற்பயிற்சிக்கூட வாடிக்கையாளர்கள் சிலர் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்