டிரம்ப் பிரசாரக்கூட்ட இடத்துக்கு அருகில் துப்பாக்கிகளுடன் இருந்த ஆடவர் கைது

1 mins read
f2498057-b34d-42bd-ad4d-a93b2c5d8f37
சனிக்கிழமையன்று கலிஃபோர்னியாவில் பிரசாரம் செய்த டோனல்ட் டிரம்ப். - படம்: ஏஎஃப்பி

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டோனல்ட் டிரம்ப், சனிக்கிழமையன்று (அக்டோபர் 12) கலிஃபோர்னியா மாநிலத்தில் பிரசாரக்கூட்டம் நடத்தினார்.

பிரசாரக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் இரு துப்பாக்கிகளுடன் இருந்த ஆடவர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

டிரம்ப்பைப் பாதுகாக்க பணியமர்த்தப்பட்டிருந்த அதிகாரிகள் அந்த ஆடவரைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

அந்த ஆடவர் வைத்திருந்த கைத்துப்பாக்கிக்குள் தோட்டாக்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆடவர் கைது செய்யப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்று அமெரிக்க உள்துறைப் பாதுகாப்புப் பிரிவு கூறியது.

டிரம்ப்பிற்கும் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டோருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று அது தெரிவித்தது.

இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர் லாஸ் வேகசைச் சேர்ந்த 49 வயது வெம் மில்லர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் ஜனவரி 2ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்