விலங்கியல் பூங்காவில் புலி தாக்கி ஆடவர் உயிரிழப்பு

விலங்கியல் பூங்காவில் புலி தாக்கி ஆடவர் உயிரிழப்பு

படம்: பிபிசி

11 Oct 2026 - 3:56 pm

1 mins read

யார்க்‌ஷியர்: பிரிட்டனின் டான்காஸ்டர் அருகில் அமைந்துள்ள யார்க்‌ஷியர் விலங்கியல் பூங்காவில் புலி தாக்கி ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

சனிக்கிழமை (அக்டோபர் 10) இச்சம்பவம் நிகழ்ந்ததைக் காவல்துறையும் உறுதிப்படுத்தியது.

அந்த ஆடவர் புலிக்கூண்டிற்குள் நுழைந்தது குறித்துப் பிற்பகல் 1.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, ஆடவரைப் புலி தாக்கியதில் அவர் அவ்விடத்திலேயே மாண்டுபோனார்.

ஆடவரின் மரணம் குறித்து அவருடைய குடும்பத்தார்க்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் அந்த விலங்கியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.

புலிக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூண்டிற்குள்ளேயே இருக்கும் அதனால் பொதுமக்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது.

புலி தாக்கியதை அடுத்து பூங்காவில் இருந்த பார்வையாளர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அப்போது, அவசர மருத்துவ வானூர்தி மேலே வட்டமிட்டதாகக் கூறிய பார்வையாளர் ஒருவர், சூழலைப் பூங்கா ஊழியர்கள் மிகவும் சிறப்பாகக் கையாண்டதாகவும் வெகுவாகப் பாராட்டினார்.

சம்பவம் குறித்த காணொளிகள் இணையத்தில் பரவி வருகின்றன. பொதுமக்கள் அவற்றைப் பகிர வேண்டாம் எனக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்