பேங்காக்: தாய்லாந்தின் ‘புரி ராம்’ மாநிலத்தைச் சேர்ந்த 37 வயது ஆடவர் ஒருவர், இடது மேற்கையில் தமது திருமணச் சான்றிதழைப் பச்சை குத்திய புகைப்படும் ஃபேஸ்புக்கில் பரவிவருகிறது.
அந்தப் படத்திற்கு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ‘லைக்ஸ்’ கிடைத்தன; ஆயிரக்கணக்கான கருத்துகள் பதிவாயின.
அந்தப் பச்சை ஜனவரி மாதம் குத்தப்பட்டதாகத் திரு நூ கூறினார்.
அந்தப் பச்சை, 37 வயதான தமது மனைவியுடன் 19 ஆண்டு திருமண வாழ்க்கையைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளதாக திரு நூ சொன்னார்.
அந்தத் தம்பதியருக்கு 16 வயது மகளும் ஏழு வயது மகனும் உள்ளனர்.
“இத்தனை ஆண்டுகளில் நாங்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்திருக்கிறோம். எங்களுக்கு இடையே பெரிய சண்டை எதுவும் ஏற்பட்டதில்லை. என் மனைவி மிகவும் புரிந்துணர்வு மிக்கவர்,” என்றார் திரு நூ.
திரு நூவும் அவரது மனைவியும் 2019ஆம் ஆண்டில் ‘முவாங் புரி ராம்’ மாவட்ட அலுவலகத்திலிருந்து திருமணச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.
அந்தப் பச்சையைக் குத்த, 2,500 பாட் (S$92) செலவிட்டதாகத் திரு நூ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்கு முக்கியமல்ல. நான் என் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருந்தாலே போதும்,” என்றார் அவர்.

