தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கழுகைத் தவிர்க்கப் போய் விபத்துக்குள்ளாகி மாண்ட ஆடவர்

1 mins read
f50b6076-2be5-4948-985b-97cf86c27a3f
கழுகின் உயிருக்கு பங்கம் விளைவிக்க விரும்பாத ஆடவருக்கே மரணம் நேர்ந்தது. - படம்: பிக்சாபே

ஈப்போ: விரைவுச்சாலையில் வாகனம் ஓட்டிச் சென்ற 37 வயது ஆடவர் ஒருவர், அங்கு வந்த கழுகின் மீது மோதாமல் இருக்க காரை வேறு திசையில் திருப்பினார்.

ஆனால், கழுகுக்குப் பதிலாக அவரது உயிர் போனது.

சாலையை விட்டு அகன்ற வாகனம் விபத்துக்குள்ளானது.

விபத்து மான்ஜுங் அருகே வெஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையில் அக்டோபர் 8ஆம் தேதி மாலை 4.35 மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆடவர் தமது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலை அருகே இருந்த பனை எண்ணெய்த் தோட்டத்துக்குள் அது சென்று நின்றது.

ஆடவர் வாகனத்திலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டதாக தீயணைப்பு, மீட்புப் பிரிவுப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

அவரை வாகனத்தை விட்டு வெளியே கொண்டு வந்த பிறகு, அவர் உயிரிழந்துவிட்டதை விபத்து நடந்த இடத்தில் இருந்த மருத்துவப் பணியாளர்கள் உறுதிசெய்தனர் என்று அக்டோபர் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 கீழ் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்