ஜெருசலம்: ஐநா பாதுகாப்பு மன்றத்தில் பாலஸ்தீன மக்கள் படும் துன்பத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
புதிய தாக்குதலை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவித்த சில மணி நேரங்களில் கிழக்கு காஸாவில் கடுமையான தாக்குதல்கள் இடம்பெறுவதாக காஸாவில் பாலஸ்தீனியச் செய்திகள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11).
இஸ்ரேலிய அமைச்சரவையின் பாதுகாப்புக் குழு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) கூடி காஸா நகரை இஸ்ரேல் கைப்பற்றும் சர்ச்சைக்கிடமான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து பேசிய திரு நெட்டன்யாகு, பாலஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாசை தோற்கடித்து, பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை மீட்பதைத் தவிர தமக்கு வேறு வழியில்லை என்று கூறினார்.
பாலஸ்தீனத்தில் காஸா நகரமே ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்டது. அங்கு இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) அதிகரித்ததாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் உணவுக் கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதாக ஷிஃபா மருத்துவமனை அதிகாரிகள் கூறினர்.
ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே அல் ஜசீரா தொலைக்காட்சியில் பணிபுரிவோர் தங்கியிருந்த ஒரு கூடாரம் தாக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் இயக்கத்தின் ஊடக அலுவலகச் செய்தியாளர்கள், அல் ஜசீராவைச் சேர்ந்த ஐவர் உட்பட எழுவர் அங்கு கொல்லப்பட்டதாக அத்தகவல் தெரிவித்துள்ளது.
அந்தத் தாக்குதலில் குறிப்பாக அல் ஜசீராவைச் சேர்ந்த அல் ஷரிஃப் என்ற செய்தியாளர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறியது.
இதுபற்றிக் கூறும் இஸ்ரேல், திரு ஷரிஃப் செய்தியாளர் என்ற போர்வையில் செயல்படும் ஹமாஸ் இயக்கத் தலைவர்களுள் ஒருவர் என்று தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காஸாவில் ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எஞ்சியுள்ள இடங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் இஸ்ரேலின் திட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் தான் விவரித்துள்ளதாக திரு நெட்டன்யாகுவின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.