கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை வெளியேற்ற உதவும் எம்சிஏ

1 mins read
9111bd9f-10b4-4721-8f69-c507688ab570
மீட்புப் படகுகளைப் பயன்படுத்தி மூத்தோரையும் பாதிக்கப்பட்ட மற்றவர்களையும் காப்பாற்றியதாக தெரிவிக்கப்பட்டது. - படம்: மலேசிய ஊடகம்

அலோர் ஸ்டார்: மலேசியாவின் கெடா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை வெளியேற்ற மலேசிய சீனர் சங்கத்தின் அவசரகால நிவாரணப் பிரிவு உதவி வருகிறது.

வெள்ளம் கரைபுரண்டோடிய பகுதிகளுக்குக் கெடா தீயணைப்புப் படையுடன் தமது குழுவினர் சென்று மக்களை வெளியேற்ற உதவியதாக அப்பிரிவின் கெடா மாநிலத் தலைவர் ஹெங் டான் கூய் தெரிவித்தார்.

மீட்புப் படகுகளைப் பயன்படுத்தி மூத்தோரையும் பாதிக்கப்பட்ட மற்றவர்களையும் காப்பாற்றியதாக அவர் கூறினார்.

மீட்கப்பட்டவர்கள் துயர்துடைப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் திரு ஹெங் கூறினார்.

வெள்ளம் காரணமாகக் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

துயர்துடைப்பு முகாம்கள் இதற்கு விதிவிலக்கல்ல என்றார் அவர்.

தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்படி அவர் கெடா மக்களைக் கேட்டுக்கொண்டார்.

அதிகாரிகள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடந்துகொள்ளும்படி திரு ஹெங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்