தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐரோப்பாவில் தட்டம்மை சம்பவங்கள் அதிகரிப்பு

1 mins read
b7042902-0dd1-4ec9-84ac-1a6028389455
தட்டம்மை ஏற்படுத்தக்கூடிய கிருமி இருமல், தும்மல் ஆகியவற்றால் எளிதில் பரவும். குறிப்பாக குழந்தைகள் எளிதாகப் பாதிக்கப்படுவார்கள்.  - படம்: ராய்ட்டர்ஸ்

டென்மார்க்: ஐரோப்பிய நாடுகளில் தட்டம்மை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரிய ஒன்று என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஐரோப்பாவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தட்டம்மை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அது குறிப்பிட்டது. 

ஐரோப்பாவில் 2023ஆம் ஆண்டு 61,070 சம்பவங்கள் பதிவாகின. அதுவே ஆக அதிகமான சம்பவங்கள் ஆகும். ஆனால் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே 56,634 தட்டம்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் நான்கு பேர் மாண்டனர்.

2022ஆம் ஆண்டு 941 தட்டம்மை சம்பவங்கள் மட்டுமே ஐரோப்பாவில் பதிவாகியிருந்தது.

தட்டம்மைக்கு எதிரான தடுப்பூசிகளை ஐரோப்பிய நாடுகள் விரைவாகப் பயன்படுத்த வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டது. 

எளிதில் பாதிப்படையக்கூடிய மக்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர் உடனடியாக தடுப்பூசிகளை போட்டுக்கொளுமாறு அது அறிவுறுத்தியது. 

தட்டம்மை ஏற்படுத்தக்கூடிய கிருமி இருமல், தும்மல் ஆகியவற்றால் எளிதில் பரவும். குறிப்பாக குழந்தைகள் எளிதாகப் பாதிக்கப்படுவார்கள். 

குறிப்புச் சொற்கள்