அமெரிக்காவுக்கு மேலே வெடித்துச் சிதறிய விண்கல்; பெரும் சத்தத்தால் மக்கள் அதிர்ச்சி

அமெரிக்காவுக்கு மேலே வெடித்துச் சிதறிய விண்கல்; பெரும் சத்தத்தால் மக்கள் அதிர்ச்சி

படம்: என்ஓஏஏ துணைக்கோள, தகவல் சேவை

31 May 2026 - 11:40 am

1 mins read

வாஷிங்டன்: பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த விண்கல், மே 30ஆம் தேதி வடகிழக்கு அமெரிக்காவுக்கு மேலே வெடித்தது. இதனால் அப்பகுதியில் 330 டன் எரிபொருள் வெடிப்பதற்கு ஈடான பெரும் சத்தம் எதிரொலித்தது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்தது.

இந்த நெருப்புக் கோளம், வடகிழக்கு மசாசூசெட்ஸ், தென்கிழக்கு நியூஹாம்ப்ஷயர் பகுதிகளில் பிற்பகல் 2.06 மணியளவில் வெடித்துச் சிதறியது என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அந்நிறுவனத்தின் புதிய செய்திப் பிரிவின் தலைவரான ஜெனிஃபர் டூரென் கூறினார்.

“இது, பூமியில் நுழைந்த விண்வெளி குப்பைகளோ, துணைக்கோளமோ அல்ல,” என்றார் அவர்.

“நெருப்புக் கோளம் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட ஆற்றல் ஏறக்குறைய 300 டன் எரிபொருள் வெடிப்பதற்குச் சமமானது என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, பெரும் சத்தம் எழக் காரணம்,” என்று மேலும் அவர் கூறினார்.

வெடித்துச் சிதறுவதற்கு முன் அது, மணிக்கு 120,700 கிலோமீட்டர் வேகத்தில் 64 கிலோமீட்டர் உயரத்தில் பூமியை நோக்கிப் பாய்ந்தது.

எதிர்பாராத பெரும் சத்தங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். தங்களுடைய வீடுகள் அதிர்ந்ததாக சிலர் சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்