ஜப்பானில் மைக்ரோசாஃப்ட் $12.86 பில்லியன் முதலீடு

மைக்ரோசாஃப்ட் முதலீட்டின் மூலம் ஜப்பானில் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி

ஜப்பானில் மைக்ரோசாஃப்ட் $12.86 பில்லியன் முதலீடு

1 mins read
1336bbe4-0fb9-4973-8702-ba4dfbbde56a
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித்தும், ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சியும் தோக்கியோவில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தனர். - படம்: இபிஏ
multi-img1 of 2

தோக்கியோ: ஜப்பானில் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 1.6 டிரில்லியன் யென் (S$12.86 பில்லியன்) முதலீடு செய்யவுள்ளது.

தோக்கியோ வந்துள்ள அந்நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் இதனை அறிவித்தார்.

இதன் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் பொறியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சியின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு இலக்குகளுக்கு இணங்க இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

சாஃப்ட்பேங்க் போன்ற உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மைக்ரோசாஃப்ட் செயல்படும்.

ஜப்பான் 2024ல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் (ஏஐ) பயன்பாட்டை அதிகரிக்கத் தொடங்கியது. வேலைசெய்யும் வயதிலுள்ளவர்களில் ஐந்தில் ஒருவர் ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவதாக மைக்ரோசாஃப்ட் கூறியது.

ஜப்பான் 2040ஆம் ஆண்டு வாக்கில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக் துறைகளில் 30 மில்லியன் ஊழியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் என அந்நாடு கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்