மத்திய கிழக்கு விவகாரம்: சமரசம் செய்துவைக்க பாகிஸ்தானுக்கு வலியுறுத்தல்

மத்திய கிழக்கு விவகாரம்: சமரசம் செய்துவைக்க பாகிஸ்தானுக்கு வலியுறுத்தல்

1 mins read
4c30770f-d8e7-4dcc-802e-687c29586978
மார்ச் மாதத்தில் சந்தித்துப் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (வலது). - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தனது சமரச முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் தொலைபேசி மூலம் உரையாடியதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முக்கியமாக, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண பாகிஸ்தான் உதவ வேண்டும் என சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

பாகிஸ்தானின் இத்தகைய சமரசப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்குச் சீனா தொடர்ந்து தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் திரு வாங் உறுதி அளித்தார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த சீனத் தலைநகர் பெய்ஜிங் செல்ல இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானின் முக்கியப் பொருளியல் பங்காளியான சீனா, ஆசியாவில் அமைதி நிலவ திட்டவரைவு ஒன்றை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

குறிப்புச் சொற்கள்