கேதார்நாத் கோயிலுக்கு திரண்ட பக்தர்கள்

கேதார்நாத் கோயிலுக்கு திரண்ட பக்தர்கள்

படம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

09 Oct 2026 - 5:42 pm

2 mins read

டேராடுன்: இந்தியாவில் உள்ள சிவன் கோயில்களில் ஆக உயரத்தில் அமைந்துள்ள முக்கியக் கோயில்களில் ஒன்று கேதார்நாத்.

இமாலய பனிமலைத் தொடர்களின் ஓர் சிகரத்தில் அமைந்துள்ள அக்கோயிலுக்கு இவ்வாண்டு இதுவரையில் 1.68 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துசென்றுள்ளதாக உத்தராகண்ட் மாநில அதிகாரிகள் பதிவுசெய்துள்ளனர்.

வரலாறு காணாத அளவில் பக்தர்கள் படை சூழ்ந்திருந்தாலும் 200 பக்தர்கள் அவசர மருத்துவ உதவிக்கென ஆகாயம் வழியாக அங்கிருந்து ஹெலிகாப்டர்களில் வெளியேற்றப்பட்டனர். மேலும் 120 உயிரிழப்புகளும் அங்கு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிபடர்ந்த சூழலில் இயற்கையான உயிர்க் காற்று அங்கு குறைவாக இருப்பதால், இதய பிரச்சினைகள், நெஞ்சு வலி போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கோயில் அமைந்துள்ள தனிப்பட்ட இடத்திலிருந்து நோயாளிகளை ஹெலிகாப்டர்களில் வெளியேற்றி மேம்பட்ட மருத்துவ வசதிகள் உள்ள இடங்களுக்கு கொண்டுசெல்வது எளிதான காரியமல்ல. அவர்களுக்கு முதலில் அவசர சிகிச்சை மருத்துவ முகாம்களில் வழங்கப்படுகிறது. கேதார்நாத் கோயில் அருகிலோ அல்லது அதனை அடையும் வழிப்பாதையிலோ அவை அமைந்துள்ளன.

நோயாளிகளின் மருத்துவ நிலையைப் பொறுத்து, அங்குள்ள மருத்துவர்கள் வான் வழியாக அவர்களை மாற்று இடங்களுக்கு அனுப்புவதற்கான முடிவுகளை எடுக்கின்றனர்.

ஒருசில நேரங்களில் அவர்கள் அம்மாநிலத்தின் மற்ற பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர். மருத்துவ உதவிகள் அதிகம் தேவைப்படாத பக்தர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவ உதவி வாகன சேவைகளும் ஹெலிகாப்டர் நிறுவனங்களும் ஒருங்கிணைந்து இந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலும் ஹெலிகாப்டர் வழியாக 19 நோயாளிகள் மேம்பட்ட மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்