கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) அன்று மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் உடனான சந்திப்புக்கு அனுமதி வழங்கினார். கடந்த டிசம்பர் மாதம் அவர் அமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு மாமன்னரைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
தேசிய அரண்மனையில் நடந்த சந்திப்பு பற்றி மாமன்னரின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மனிதவள அமைச்சின் வருங்காலத் திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி மாமன்னருக்கு விரிவாக விளக்கிக் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் திட்டமிடல் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மாமன்னரிடம் விளக்கமளிக்கப்பட்டது என அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
தற்போது சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன், இதற்கு முன்பு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

