தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏமனிலிருந்து பாய்ச்சப்பட்ட எவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டது: இஸ்‌ரேலிய ராணுவம்

1 mins read
6eb13f4c-ed8d-4fb2-b668-61ca26bfa761
ஹூதிப் படைகள் பாய்ச்சிய பெரும்பாலான ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் சுட்டு வீழ்த்திவிட்டதாக இஸ்‌ரேல் தெரிவித்தது. அத்துடன், ஹூதிப் படைகளுக்கு எதிராக இஸ்ரேல் பதிலடித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: இஸ்‌ரேலை நோக்கி ஏமனிலிருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணையைs சுட்டு வீழ்த்தியதாக இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்‌ரேலுக்கு எதிரான தாக்குதல்களை ஹூதிப் படை தொடர்ந்தால் அதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் சென்றடைய பயன்படுத்தப்படும் கடல்வழி, ஆகாயவழிப் பாதைகள் முற்றுகையிடப்படும் என்றும் இஸ்‌ரேல் எச்சரிக்கை விடுத்தது.

ஈரானின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹூதிப் படை, காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஸா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் மற்றும் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களை நோக்கி பல ஏவுகணைகளை ஹூதிப் படை பாய்ச்சியுள்ளது.

இதனால் உலகளாவிய வர்த்தகம் தடைப்பட்டது.

ஹூதிப் படைகள் பாய்ச்சிய பெரும்பாலான எவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் சுட்டு வீழ்த்திவிட்டதாக இஸ்‌ரேல் தெரிவித்தது.

அத்துடன், ஹூதிப் படைகளுக்கு எதிராக இஸ்ரேல் பதிலடித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்ஹூதிஏவுகணை