கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷிதா ராஜபக்ச இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டரகாமா பகுதியில் சட்டவிரோதமாகச் சொத்து சேர்த்த குற்றத்திற்காக அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச, பிரதமராகவும் பதவி வகித்தவர். இவரது இரண்டாவது மகனான யோஷிதா ராஜபக்ச மீதான பணமோசடி புகார் தொடர்பில் அந்த நாட்டின் குற்றப் புலனாய்வுக் காவல்துறை விசாரணை நடத்தி வந்தது.
இதைத்தொடர்ந்து, விசாரணை முடிவடைந்த நிலையில், பணமோசடி சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து யோஷிதா ராஜபக்ச சனிக்கிழமை (ஜனவரி 25) பெலியட்டா பகுதியில் சிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

