லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக விரல் நகங்களில் பூசப்படும் சாயம் வழியாக வினோத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கமலாவுக்கான வண்ணங்கள் (Colours for Kamala) என்றும் பொருள்படும் அமைப்பு ஒன்றை நிறுவிய எமி ரோசந்தலும் அவரது கூட்டாளி கேத்தி ஃபிரைட்மேனும் பல வண்ண நகப் பூச்சுகளை வெவ்வேறு கருப்பொருள்களில் உருவாக்கி உள்ளனர்.
அதிபர் தேர்தல் பிரசாரத்தின் ஒரு கட்டத்தில் ‘என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்’ என்று குடியரசுக் கட்சி வேட்பாளர், முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்புக்கு திருவாட்டி கமலா ஹாரிஸ் சவால் விடுத்துப் பேசினார்.
அந்தப் பொருளிலான ஆங்கில வார்த்தைகள் பொறிக்கப்பட்ட நகப்பூச்சு ஒன்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
பல வண்ண நகப்பூச்சுகளின் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை கமலா ஹாரிசின் பிரசாரச் செலவுகளுக்குப் பயன்படுத்த இருப்பதாக திருவாட்டி எமி கூறினார்.

