யங்கோன்: 2024-25 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மியன்மார் 510,000 டன் அரசியை ஏற்றுமதி செய்துள்ளது என்றும் அதன் மூலம் அந்நாட்டுக்கு US$256 மில்லியன் வருவாய் கிடைத்துள்ளது என்றும் மியன்மார் அரிசிச் சம்மேளனம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) தெரிவித்தது.
அந்த நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில் 111,862 டன்னும் மே மாதத்தில் 71,279 டன்னும் ஜூன் மாதத்தில் 162,326 டன்னும் ஜூலையில் 165,444 டன்னும் பல நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அரிசி மற்றும் குருணை அரிசியை சீனா, இந்தோனீசியா, பெல்ஜியம், புர்கினா ஃபாசோ, ஸ்பெயின், ஐவரி கோஸ்ட் உட்பட 30 நாடுகளுக்கும் மேல் மியன்மார் ஏற்றுமதி செய்துள்ளது என்றும் சம்மேளனம் விவரித்தது.
ஒப்புநோக்க, 2023-24 நிதியாண்டில் மியன்மார் 1.6 மில்லியன் டன் அரிசி மற்றும் குருணை அரிசியை ஏற்றுமதி செய்ததில், அந்த நாட்டுக்கு ஆக அதிகாக US$845 மில்லியன் வருவாய் கிட்டியது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகிறது.

