பேங்காக்: தென்கிழக்காசிய வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு தாய்லாந்தில் நடந்துவருகிறது.
அந்த சந்திப்புக் கூட்டம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) மியன்மாரின் வெளியுறவு அமைச்சர் நீண்டநாள் சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி அம்மையார் குறித்து கருத்துரைத்துள்ளார்.
அதனை பிலிப்பீன்சின் வெளியுறவு அமைச்சர் மரியா தெரசா லசாரோ செய்தியாளர் கூட்டத்தில் உறுதிப்படுத்தினார்.
“ஆங் சான் சூச்சி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கிறார். அவர் ஒரு சகோதரியைப் போன்றவர். எனவே அவரை முறையாக நாங்கள் பராமரிப்போம்,” என்று மியன்மார் வெளியுறவு அமைச்சர் சொன்னதாக அந்நாட்டுக்கான ஆசியானின் சிறப்புத் தூதரும் ஆன திருவாட்டி மரியா குறிப்பிட்டார்.

