சகாயிங்: மியன்மாரின் காடுகளில் ஜனநாயகப் புரட்சிக்கு அடையாளமான சிவப்பு நிறத்திலான கொடியைப் பார்த்து விடுதலைப் போராளிகள் கை உயர்த்தி மரியாதை செலுத்தினாலும் அவர்களின் போராட்டம் வலுவிழந்து வருகிறது.
ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் மியன்மார் பாதிக்கப்பட்டுவந்துள்ளது. இருப்பினும் அதன் ஜனநாயகத்துக்கான விடுதலைப் போராளிகளின் முயற்சிகள் பின்தங்கிவிட்டன.
“புரட்சி நீண்டநாள் நீடிக்கும்,” என்று மக்கள் தற்காப்புப் படையின் தளபதி மியன்மாரின் காடுகளில் இயங்கும் ரகசியப் பயிற்சித் தளத்தில் இருந்து கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன் படையில் சேர்ந்த வீரர்கள்கூட புரட்சி வெற்றியடையுமா என்று சந்தேகிக்கின்றனர் என்று பாதுகாப்பு கருதி அடையாளத்தை வெளியிட விரும்பாத அந்த 23 வயது தளபதி கவலையுடன் குறிப்பிட்டார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாட்டி ஆங் சான் சூச்சீ அம்மையாரின் அரசை வியட்னாம் ராணுவத்தினர் 2021ல் வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றினர். அதனை அடுத்து நடந்துவரும் புரட்சியில் ஏறத்தாழ 100,000க்கும் மேற்பட்ட மியன்மார் மக்கள் இதுவரை கொல்லப்பட்டனர்.
ஒருகட்டத்தில் ராணுவ ஆட்சியினரை ஜனநாயகப் புரட்சிப் படையினர் ஓரளவு கட்டுப்படுத்தினாலும் தற்போது அவர்களது முயற்சிகள் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளன. ராணுவ ஆட்சியினரின் கரங்கள் நடந்துவரும் போரில் ஓங்கியே உள்ளது.
சீனாவின் ஆதரவோடு மியன்மார் ராணுவ ஆட்சியினர் புரட்சிப் படையினரை எதிர்த்து போர்க்களத்தில் வெற்றி அடைந்துவருகின்றனர்.
ஆட்சியைக் கவிழ்த்து அண்மையில் தேர்தல் நடத்தி ஒரு சார்பாக அரசாங்கத்தை வழிநடத்தும் மியன்மார் ராணுவத் தலைவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க அனைத்துலக நாடுகள் மறுக்கின்றன.
புரட்சிப் படையினருக்கும் ராணுவ ஆட்சியினருக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த சீனா முயன்று வருகிறது.
அதன் அங்கமாக தாய்லாந்தில் மியன்மார் ஆட்சியினர் வட்டாரத் தலைவர்களுடன் இவ்வாரம் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

