சமய வழிபாடு, மருத்துவச் சிகிச்சையில் பங்கேற்ற நஜிப்: மலேசியா

சமய வழிபாடு, மருத்துவச் சிகிச்சையில் பங்கேற்ற நஜிப்: மலேசியா

படம்: இபிஏ

14 Nov 2026 - 5:28 pm

1 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தமது இல்லத்தில் ஏறக்குறைய எட்டு மணிநேரம் இல்லாமல் போனதற்கான காரணங்களை அந்நாட்டுச் சிறைத் துறை தெரிவித்துள்ளது.

ஜாலான் லாங்காக் டுட்டாவில் உள்ள இல்லத்தில் எஞ்சிய சிறைத்தண்டனையைக் கழிக்க அனுமதிபெற்ற திரு நஜிப், மருத்துவரைச் சந்தித்ததுடன் சமய நடவடிக்கைகளிலும் ஆலோசனை அமர்வுகளிலும் ஈடுபட்டதாகச் சிறைத் துறை சொன்னது.

காலை 10.25 மணிமுதல் மாலை 6.25 மணிவரை திரு நஜிப் வெள்ளிக்கிழமைத் தொழுகையில் மட்டும் ஈடுபடவில்லை என்று தனது அறிக்கையில் அது குறிப்பிட்டது.

கோலாலம்பூர் மருத்துவமனையின் எலும்பியல் துறையில் சிகிச்சைக்கான பரிசோதனை மேற்கொண்ட திரு நஜிப், காஜாங் சிறைச்சாலைப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமைத் தொழுகையிலும் ஈடுபட்டார்.

அதையடுத்து, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையின் ஆசிரியர் ஒருவருடன் சமய வகுப்பில் கலந்துகொண்ட அவர், காஜாங் சிறைச்சாலை மனோவியல் நிபுணருடன் ஆலோசனை அமர்வில் பங்கேற்றார்.

“இவை அனைத்தும் முடிந்த பிறகு மாலை 5.50 மணிக்குத் திரு நஜிப், காஜாங் சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு மாலை 6.25 மணிக்கு ஜாலான் லங்காக் டுட்டாவில் உள்ள இல்லத்தைச் சென்றடைந்தார்,” என்று சிறைத் துறை விவரித்தது.

சிறைத்தண்டனையை நிறைவேற்றும் ஒவ்வொரு நபரையும் நிர்வகிப்பதில் சமயம் சார்ந்த நடவடிக்கைகள், மருத்துவச் சிகிச்சை, மறுவாழ்வுத் திட்டங்கள், தலையீட்டு அமர்வுகள் ஆகியவை கருத்தில்கொள்ளப்படும் அம்சங்களில் அடங்கும் என்று அது மேலும் சொன்னது.

குறிப்புச் சொற்கள்
நஜிப் ரசாக்வீடுகாவல்துறை