கூடிய விரைவில் கடப்பிதழ், விசா இல்லாமல் இவ்விமான நிலையம் வழியாகப் பயணம் செய்யலாம்

வெளிநாடு செல்ல விரும்புவோர் கூடிய விரைவில் கடப்பிதழ், விசா இல்லாமல் பயணம் செய்யும் வசதியை அளிக்கப் போகிறது துபாய் விமான நிலையம்.

அறிவார்ந்த தொழில்நுட்பம் அதற்குக் கைகொடுக்கவுள்ளது.

துபாயில் திங்கட்கிழமை தொடங்கிய ‘ஜிட்டெக்ஸ்’ தொழில்நுட்பக் கண்காட்சியின்போது ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்கும் நிறுவனமான இமாராடெக் இவ்விவரங்களைத் தெரிவித்தது.

“பயணி ஒருவர் விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர் குறித்த தரவுகள் அனைத்தையும் கொண்டிருப்போம்,” என்றார் அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் அகமது பகா.

பயண ஆயத்த முகப்பில் (check-in counter) பயணி படமெடுக்கப்படுவார். அவரது முக அடையாளங்கள் வருடப்படும். அவரது விரிவான பயணத்திட்டம் வழங்கப்பட்டு, அவர் தமது பயண உடைமைகளை ஒப்படைக்க வழிவகை செய்யப்படும்.

“பயணி ஒருவரது பயணம் முழுக்க அவருடைய புகைப்படம் பயன்படுத்தப்படும். குடிநுழைவுச் சோதனைக்கு முகப்பிற்குச் செல்லத் தேவையிராது. மாறாக, விவேக நுழைவாயிலுக்கு (Smart gate) அவர் செல்லலாம். அங்கும் அவர் எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டியதில்லை,” என விளக்கினார் திரு அகமது.

ஏதேனும் பொருள் வாங்குவதாக இருந்தால், அங்கிருந்து நேராக வரியில்லாக் கடைகளுக்குச் செல்லலாம். அங்கும் சரி, பயண நுழைவாயிலிலும் (Boarding gate) சரி, அவர்கள் எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டியிராது என்று அவர் சொன்னதாக ‘கலீஜ் டைம்ஸ்’ செய்தி தெரிவிக்கிறது.

பாதுகாப்புச் சோதனை முடிந்துவிட்டால், துபாய் விமான நிலையத்திலிருந்து எளிதாக, சுமுகமாகப் பயணம் செய்யலாம் என்கிறார் திரு அகமது.

இருப்பினும், இந்நடைமுறை எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை இப்போதே சொல்ல இயலாது என்றார் அவர்.

“இதுகுறித்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், துபாய் விமான நிலையம், குடிநுழைவு ஆணையம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது சாத்தியமாக பல்வேறு உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும்,” என்று அவர் சொன்னார்.

இந்நிலையில், விவேக நுழைவாயில் துபாய் விமான நிலைய குடிநுழைவுச் சோதனைப் பகுதியில் ஏற்கெனவே நிறுவப்பட்டுவிட்டதையும் திரு அகமது குறிப்பிட்டார்.

விரைவில் எல்லா ஒருங்கிணைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு, பயணிகள் தடையற்ற பயண அனுபவத்தைப் பெற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!