டாக்கா: பங்ளாதேஷில் திடீர் வெள்ளம் காரணமாகப் பேரளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்திலிருந்து தப்பித்த சுமார் 300,000 பங்ளாதேஷியர்கள் அவசரகால முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வெள்ளம் மோசமடைந்து வர, மில்லியன்கணக்கானோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
வெள்ளம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.
அண்மையில் பங்ளாதேஷில் அரசியல் நெருக்கடிநிலை ஏற்பட்டது.
நாடெங்கும் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதை அடுத்து, பிரதமராகப் பதவி வகித்த திருவாட்டி ஷேக் ஹசினா பதவி விலகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
அதையடுத்து, தற்போது பங்ளாதேஷியர்களை வெள்ளம் உலுக்கி வருகிறது.
“நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்ற எங்களால் ஆன அனைத்தையும் செய்கிறோம்,” என்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் 35 வயது ஸாஹிட் உசேன் புய்யா, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வெள்ளத்தால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஃபெனி நகரில் அவர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

