நெகிரி செம்பிலான் நெருக்கடி சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டும்

நெகிரி செம்பிலான் நெருக்கடி சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டும்

படம்: பெர்னாமா

22 Sep 2026 - 5:14 pm

1 mins read

கோலாலம்பூர்: நெகிரி செம்பிலானில் நிலவும் நெருக்கடி அதன் கண்ணியம், மரபு, நடைமுறையில் உள்ள அமைப்புகளை மதித்து, சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும்.

இவ்விவகாரத்தில் சட்ட விளக்கம், அதிகார வரம்பு குறித்த கேள்விகளும் அடங்கியுள்ளதால், அது தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமர் டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். 

“நெகிரி செம்பிலானில் உள்ள மாநில விவகாரங்கள் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும். என் பார்வையில், இதில் சட்ட விளக்கம், அதிகாரம் சார்ந்த விவகாரங்கள் அடங்கியுள்ளன. இது வெறும் சட்ட விளக்கம் சார்ந்த கேள்வி மட்டுமல்ல. நெகிரி செம்பிலானில் உள்ள நிறுவனங்களையும் அமைப்புகளையும் மதிக்க வேண்டும்,’’ என்றார் அவர். 

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22), கோலாலம்பூரில் நடைபெற்ற பல்கலைக்கழக ஆராய்ச்சி முதலீடு, புத்தாக்க உச்சநிலை மாநாட்டைத் தொடங்கி வைத்த பின்னர், தேசிய முன்னணித் தலைவருமான சாஹிட் செய்தியாளர்களிடம் பேசினார். 

திங்கட்கிழமை நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சந்தித்த நிலையில், அந்தச் சந்திப்பில் தாமும் நெகிரி செம்பிலான் முதல்வர் இஸ்மாயில் லாசிமும் கலந்துகொள்ளவில்லை என்று அவர் விவரித்ததாக பெர்னாமா தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
தேசிய முன்னணிமுதலீடுவரம்புநெகிரி செம்பிலான்