சர்ச்சைக்குரிய வட்டாரத் தலைவர்களை அரசிதழ் மூலம் நீக்கினார் நெகிரி ஆட்சியாளர்

சர்ச்சைக்குரிய வட்டாரத் தலைவர்களை அரசிதழ் மூலம் நீக்கினார் நெகிரி ஆட்சியாளர்

படம்: மலாய் மெயில்

28 Oct 2026 - 8:03 pm

1 mins read

சிரம்பான்: நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் ஆணையைத் தொடர்ந்து, சுங்கை உஜோங்கின் முன்னாள் வட்டாரத் தலைவர், ஜெலேபுவின் முன்னாள் வட்டாரத் தலைவர் ஆகியோரின் பதவிகள் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன.

அக்டோபர் 23ஆம் தேதியிடப்பட்ட மாநில அரசிதழின்படி, நெகிரி செம்பிலான் 1959 அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(1)க்கு இணங்க அப்பதவிகளிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டதாக ஆட்சியாளர், வட்டாரத் தலைவர்கள் மன்றத்தின் (டிகேயு) செயலாளர் ராஜா நோரஸ்லி ராஜா நோர்டின் கூறினார்.

முன்னாள் வட்டாரத் தலைவர் முபாரக் தோஹக்கைப் பதவி நீக்கம் செய்ய எடுத்த முடிவு குறித்து, டிகேயுவின் சிறப்பு அமர்வுக்கு முறைப்படி அறிவிக்கப்பட்டதாக முதல் அரசிதழ் தெரிவித்தது.

வழக்கமான சட்டங்கள், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட அவரது நீக்கம், கடந்த ஆண்டு மே 13ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.

ஒரு தனி அரசிதழின்படி, லுவாக் ஜெலேபுவின் ஆளும் பரம்பரையைச் சேர்ந்த வாரிசுகள், அனாக் புவா குல உறுப்பினர்கள், புவாபக் பரம்பரைத் தலைவர்கள், இபு சோகோ தலைவர்கள் ஆகியோரும் திரு மாரோஃப் மாட் ரஷாத்தை ஜெலேபுவின் வட்டாரத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவது குறித்து முடிவெடுத்துள்ளனர்.

சுங்கை உஜோங்கின் முன்னாள் வட்டாரத் தலைவர் பதரூதின் அப்துல் காலித்தின் பதவி நீக்கமும் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களும் அரசாங்க அதிகாரிகளும் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அரசிதழ்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்
பதவிசிறப்புஆட்சியாளர்