உலகின் ஆக வயதான ஆமைக்குப் புதிய அங்கீகாரம்

உலகின் ஆக வயதான ஆமைக்குப் புதிய அங்கீகாரம்

1 mins read
889a1db9-5e76-40fc-8226-ea22df6ad725
194 வயதான ஜானத்தனுக்குத் தற்போது கின்னஸ் உலக சாதனைகளின் ‘ஐகான்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. - படம்: செயிண்ட் ஹெலெனா அரசாங்கம்/ஃபேஸ்புக்

லண்டன்: ஜானத்தன் என்னும் உலகின் ஆக வயதான ஆமைக்குப் புதிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது.

194 வயதான ஜானத்தனுக்குத் தற்போது கின்னஸ் உலக சாதனைகளின் ‘ஐகான்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஜானத்தன் உலகில் வாழும் ஆக வயதான நில விலங்கு என்ற சாதனையைத் தன்வசம் வைத்துள்ளது. தற்போது அந்த ஆமை செயிண்ட் ஹெலெனா தீவில் வாழ்ந்து வருகிறது.

ஜானத்தன் 1832ஆம் ஆண்டு சி‌ஷெல்ஸ் தீவில் பிறந்ததாக நம்பப்படுகிறது.

1882ஆம் ஆண்டு ஜானத்தன் ஆமைக்கு 50 வயதாக இருந்தபோது அது சி‌ஷெல்ஸ் தீவிலிருந்து செயிண்ட் ஹெலெனாவுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

வயது மூப்பு காரணமாக வாசனை உணர்வை ஜானத்தன் இழந்துவிட்டது. இருப்பினும் அந்த ஆமை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக உள்ளூர் விலங்கு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பெரும்பாலான ஆமைகள் 150 ஆண்டுகள் வரை வாழக்கூடிய தன்மை கொண்டவை.

கடந்த ஏப்ரல் மாதம் ஜானத்தன் ஆமை இறந்துவிட்டதாகச் சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகள் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவின் பாப் இசைக் குழு பிளாக்பின்க், மல்யுத்த வீரர் ஜான் சீனா போன்றவர்களுக்கு கின்னஸ் உலக சாதனைகளின் ‘ஐகான்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்