தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

37 நாள்களுக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தை

1 mins read
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அவளது வீடு குண்டுவீச்சுக்கு இரையானது
c8b9542e-7da4-4405-bb98-1b87f5173505
இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை. - காணொளிப்படம்

காஸா: இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்குவதற்குச் சில நாள்களுக்குமுன் பிறந்த பாலஸ்தீனக் குழந்தை, அவர்களது வீடு குண்டுவீச்சால் இடிந்த நிலையில் உயிர்பிழைத்துள்ளது.

போர் தொடங்கி 37 நாள்களுக்குப் பிறகு அக்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த அக்குழந்தையின் வீட்டிற்கு அருகே மீட்புப் பணிகள் இடம்பெற்றன.

குடிமைத் தற்காப்பு உறுப்பினரும் புகைப்படக் கலைஞருமான நூ அல் ஷக்னோபி என்பவர், இந்த அதிசயிக்கத்தக்க கதை குறித்த காணொளியைத் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பெண் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி பலரும் கைவிட்ட நிலையில், மூன்று மணி நேரக் கடும் முயற்சிகளுக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

ஆயினும், அக்குழந்தையின் பெற்றோர் உயிருடன் உள்ளனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இடம்பெற்ற ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை கிட்டத்தட்ட 15,000 பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்றும் அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்களும் குழந்தைகளும் ஆவர் என்று பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கிய நான்கு நாள் போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்