நைஜீரியாவில் படகு விபத்து; குறைந்தது 60 பேர் மரணம்

நைஜீரியாவில் படகு விபத்து; குறைந்தது 60 பேர் மரணம்

1 mins read
2ef89840-a6cc-4327-a8bf-e0ec0d5397e7
ஏறத்தாழ 160 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். மீட்புப் பணிகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: இணையம்

மாய்டுகுரி: நைஜீரியாவில் நிகழ்ந்த படகு விபத்தில் குறைந்தது 60 பேர் மாண்டனர்.

மாண்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள்.

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள நைஜர் மாநிலத்தில் நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டு அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது அவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் படகு விபத்து செப்டம்பர் 1ஆம் தேதி இரவு நைஜர் ஆற்றில் நிகழ்ந்தது.

சம்பவம் நிகழ்ந்தபோது படகில் கிட்டத்தட்ட 300 பேர் இருந்தனர்.

ஏறத்தாழ 160 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

மீட்புப் பணிகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

படகு கவிழ்ந்து மூழ்கியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்