தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நைஜீரியா: 19 மாநிலங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

1 mins read
35d2d05e-203d-409b-b79f-35a6ab3bd4ee
கடந்த மே மாதம், நைஜர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 117 பேர் மாண்டனர். - படம்: பிக்சாபே

அபுஜா: நைஜீரியாவின் சுற்றுப்புற அமைச்சு, 19 மாநிலங்களுக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 6) வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9 வரை பெய்யக்கூடிய கனமழை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அது எச்சரித்துள்ளது.

தேசிய வெள்ள எச்சரிக்கை நிலையம் ஆபத்துக்குள்ளாகும் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. வடமேற்கில் ஐந்து மாநிலங்கள், தெற்கில் மூன்று மாநிலங்கள், மத்தியப் பகுதியில் நான்கு மாநிலங்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

கடந்த மே மாதம், நைஜர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 117 பேர் மாண்டனர். பலர் காணாமல்போயினர். ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துபோயின.

உத்தேச சேதங்களைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் குடியிருப்பாளர்களையும் உள்ளூர் அரசாங்கங்களையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது நைஜீரியாவில் உச்ச மழைக்காலம். இந்தக் காலத்தின்போது கடும் வெள்ளம் ஏற்படுவது வழக்கம்.

கடந்த 2022ஆம் ஆண்டில், பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அந்நாடு ஆக மோசமான வெள்ளத்தை எதிர்நோக்கியது. அப்போது, 600க்கும் மேற்பட்டோர் மாண்டனர். 1.4 மில்லியன் பேர் வீடுகளிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. 440,000 ஹெக்டர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் அழிந்துபோயின.

குறிப்புச் சொற்கள்