பிலிப்பீன்சுடன் எரிபொருள் ஒப்பந்தம் ஏதுமில்லை: பெட்ரோனாஸ்

பிலிப்பீன்சுடன் எரிபொருள் ஒப்பந்தம் ஏதுமில்லை: பெட்ரோனாஸ்

1 mins read
தற்போது பிலிப்பீன்சில் போதுமான எரிபொருள் இல்லை
40c4a4e9-8386-412a-a021-68afaf29264e
பிலிப்பீன்ஸ் போதுமான எரிபொருள் இல்லாமல் ஆட்டம் கண்டுள்ளது. எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகளையும் அது எடுத்துவருகிறது. - படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: பிலிப்பீன்ஸ் அரசாங்கத்துடன் எரிபொருள் விநியோகம் தொடர்பாக எந்த ஓர் ஒப்பந்தமும் போடவில்லை என்று மலேசியாவின் பெட்ரோனாஸ் தெரிவித்துள்ளது.

பிலிப்பீன்ஸ் உடனான ஒப்பந்தம் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் எந்த ஒரு நடவடிக்கையிலும் தங்களது நிறுவனம் ஈடுபடவில்லை என்றும் பெட்ரோனாஸ் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

மலேசியாவில் தொடர்ந்து எரிபொருள் இருப்பதை உறுதிசெய்வதில்தான் பெட்ரோனசின் கவனம் இருப்பதாக அது தெரிவித்தது.

“மலேசியாவில் எரிபொருள் விநியோகச் சங்கிலி சீராகவும் நன்கு திறம்பட இயங்கும் விதமாகவும் இருக்க முன்னுரிமை வழங்கப்படும். அதற்காக அரசாங்கத்துடன் இணக்கமாகச் செயல்பட்டு வருகிறோம்,” என்று பெட்ரோனாஸ் கூறியது.

கடந்த வெள்ளிக்கிழமை பிலிப்பீன்சின் முன்னணி செய்தி நிறுவனமான ஏபிஎஸ்-சிபிஎன் (ABS-CBN), மின்டானோ மாநிலத்தில் உள்ள டாவோ டெல் நார்டே பகுதிக்கு பெட்ரோனாஸ் 44 மில்லியன் லிட்டர் டீசல் வழங்கவுள்ளதாகச் செய்தி வெளியிட்டது.

பிலிப்பீன்சும் போதுமான எரிபொருள் இல்லாமல் ஆட்டம் கண்டுள்ளது. எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகளையும் அது எடுத்துவருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேலுக்கும் இடையிலான போர் தொடர்வதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் பல எரிபொருள் விநியோகம் இல்லாமல் தடுமாறி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்