பியோங்யாங்: சிங்கப்பூரர்கள் உட்பட வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு வடகொரியா தனது எல்லைகளைத் திறந்துவிட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது தனது எல்லைகளை மூடியது.
அதையடுத்து, இப்போதுதான் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு வடகொரிய எல்லைகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
இதற்காகக் குறிப்பிட்ட சில சுற்றுப்பயண முகவைகளை வடகொரியா தேர்ந்தெடுத்துள்ளது.
ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடனான வடகொரிய எல்லைப் பகுதியில் உள்ள ரேசன் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கு மட்டுமே வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் செல்லலாம்.
அவ்விடத்தில் பீர் தயாரிப்பு ஆலை, வெளிநாட்டு மொழிப் பள்ளி, தேக்வான்டோ தற்காப்புப் பயிற்சிப் பள்ளி ஆகியவை உள்ளன.
வடகொரியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் எல்லைகள் சங்கமிக்கும் இடத்தையும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் கண்டுகளிக்கலாம்.
இதற்கிடையே, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வடகொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும்படி சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வடகொரியாவுக்குள் நுழைய தென்கொரியர்களுக்கு அனுமதி இல்லை.
வடகொரியாவுக்கு அமெரிக்கர்களும் செல்ல முடியாது.
அமெரிக்க அரசாங்கம், வடகொரியா செல்ல அமெரிக்கர்களுக்குத் தடை விதித்துள்ளது.
இத்தடை 2017ஆம் ஆண்டிலிருந்து நடப்பில் உள்ளது.

