எண்ணெய் நெருக்கடி: ஜப்பான் $12.7 பில்லியன் தென்கிழக்காசியாவுக்கு கடனுதவி

எண்ணெய் நெருக்கடி: ஜப்பான் $12.7 பில்லியன் தென்கிழக்காசியாவுக்கு கடனுதவி

1 mins read
எரிவாயு இறக்குமதிகளுக்கு உயர்ந்துவரும் கட்டணம் குறித்து பல தென்கிழக்காசிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன
1e124da8-bc19-41b5-8d6b-482d358cc125
ஜப்பானின் கனகாவா பகுதியில் உள்ள எண்ணெய்க் கிடங்குகள். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

தோக்கியோ: மத்திய கிழக்குப் போரினால் ஏற்பட்டுள்ள எண்ணெய், எரிவாயு நெருக்கடியைச் சமாளிக்க தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி வழங்கவிருப்பதாக அதன் அரசாங்க அதிகாரிகள் புதன்கிழமை (ஏப்ரல் 15) தெரிவித்துள்ளனர்.

இயற்கை எரிவாயுவைக் கொண்டு தயாரிக்கப்படும் பல பொருள்களை ஜப்பான் தென்கிழக்காசியாவில் இருந்தே இறக்குமதி செய்கிறது. மருத்துவ அமைப்புகள் உள்பட ஜப்பானின் பல துறைகளுக்கு அவை தேவைப்படுகின்றன.

எரிபொருள் நெருக்கடியால் தத்தளிக்கும் தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களுடன் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து பிரதமர் சனேய் தக்காய்ச்சி விரைவில் திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமையன்று இணையத்தில் அவர் நடத்தவிருக்கும் சந்திப்புக் கூட்டத்தில் அந்த அறிவிப்பு இடம்பெறும் என்று அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பல தென்கிழக்காசிய நாடுகளுக்கு எரிபொருள் கையிருப்புகள் குறிப்பிட்ட அளவே உள்ளன. அவற்றைப் போதிய அளவு நிலைநாட்டுவதில் சவால்கள் ஏற்பட்டால், அதன்வழியாக ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல பொருள்கள் பாதிக்கப்படும்.

“பெட்ரோலியம் சார்ந்த பொருள்களின் விநியோகச் சங்கிலித் தொடர் வலுப்பெறும் நோக்கத்துடன் பல ஆசிய நாடுகளுடன் ஒத்துழைப்பதை பரிசீலனை செய்கிறோம்,” என்று ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினுரோ கிஹாரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்